திருக்கோவில்,தம்பிலுவில் பகுதியில் அதிகரிக்கும் குரங்குத் தொல்லை


 திருக்கோவில் தம்பிலுவில் பகுதிகளில் குரங்களின் அதகரித்த புழக்கத்தினால் பிரதேச மக்கள் மிகவும் அசௌகரியத்திற்குள்ளா கின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

காலை மற்றும் மலை நேரங்களில் இவற்றின் புழக்கம் அதிகரித்து காணப்படுவதுடன் மக்களின் பயிர்களை அதிகம் இவை சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலைவேளைகளில் பிரதான வீதிகளில் இவை நடமாடுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் கூடுதலாக காணப்படுகின்றது.

இவற்றை அப்புறப்படுத்த மக்கள் முயலும் போது மக்களை இவை தாக்க வரும் நிலை உருவாகியுள்ளதுடன் வீதியோரத்தினால் செல்லும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிறார்கள் இவற்றினால் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக தென்னைமரங்களை இவை அதிகம் தேசப்படுத்துவதாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் எனினும் இது தொடர்பில் இதுவரை எது வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் மக்களிடம் இருந்து எது வித முறைப்பாடுகளும் பிரதேச மட்ட உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.

எனவே திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், பிரதேச நலன் விரும்பிகள், இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனமெடுத்து உரிய நடவடிக்கைமேற் கொள்ள ஊக்குவிப்பது சிறந்தது.

 




No comments: