லயன் என்ற வார்த்தையை மாற்றி அமைப்பதே எனது கனவு -மஹிந்தாநந்த

எஸ்.சதீஸ்

பெருந்தோட்டபகுதியில் லயன்குடியிருப்பில் வாழுகின்ற மக்களை லயன் என்ற பதத்தை முற்றாக மாற்றி லயன்குடியிருப்பில் இருந்து வெளியேற்றி புதிய முறையிலான வாழ்க்கை ஒன்றை வாழப்பதே எனது நீண்டகால கணவு என விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார் 07.01.2022.நாவலபிட்டி கடுகஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர்.

தோட்டப்பகுதியில் தொழில்புரியும் அனைவருக்கும் இந்த வரும் ஏப்ரல்
மாதத்திற்கு முன்பு ஏழு பேர்ச் கானிவழங்கி அதில் வீட்டுத்திட்டத்ததை
அமைத்து அந்த வீட்டுத்திட்டத்திற்கு பாதை,மின்சாரம்,நீர்வசதி. என்பன
செய்து கொடுக்கப்பட உள்ளேன். தோட்டபகுதியில் மக்கள் தொடர்ந்தும் தொடர் லயன் அறைகளிலே வாழ்ந்து வருகிறார்கள் நான் அமைச்சராக பொறுப்பேற்று பல அரசதொழிலை வழங்கியுள்ளேன் இவ்வளவு காலம் வேலுகுமார் என்ன செய்தார்.

மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்று கொண்டு வருடத்திற்கு ஒருமுறை
நீர்வசதியினை மாத்திரம் செய்து கொடுத்துவிட்டு செல்லுவா்தான் வேலுகுமார்.

பாராளுமன்றத்தில் சத்தம் மாத்திரம் இடுவார் வேறு எந்த
வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை தற்பொழுது இந்த வெஸ்டோல் பிரதேசத்தின் வீதியினை எந்தளவு அபிவிருத்தி செய்துள்ளேன் என்பதுமக்களுக்கு நன்றாக தெரியும் வெஸ்டோல் பாடசாலை தற்பொழுது தேசிய பாடசாலையாக மாற்றம் பெற்றுள்ளது. தோட்டப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் அரசாங்கத்திற்கு பொருப்பேற்றது என்னுடைய காலப்பகுதியில் . 
\
ஜக்கிய தேசிய கட்சியின் காலப்பகுதியில் இளைஞர்யுவதிகளுக்கு எவ்வித அரச வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த வருடம் கடுகஞ்சேனை நகரத்தினை நாம் அபிவிருத்தி செய்ய போகின்றோம். ஏப்ரல் மாத்திற்கு பிறகு இங்குள்ள மக்கள் நாவலபிட்டி மற்றும் கம்பளை பகுதிக்கு செல்லவேண்டி தேவை ஏற்படாது. மக்களுக்கு வழங்கவேண்டி அனைத்து தேவைகளையும் வழங்கப்படவேண்டும் .

கடந்த அரசாங்கத்தின் நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தான்
நாவலபிட்டி பேருந்து தரிப்பிடம் ,விளையாட்டு மைதானம்,நாவலபிட்டி
வைத்தியசாலை என்பன அபிவிருத்தி செய்தேன் ஜந்து வருடம் ஜக்கிய தேசிய கட்சி இருந்தது என்ன செய்தது எமக்கு தெரியும் பொருடகளின் விலை அதிகரித்துள்ளது அதற்கு காரனம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று. இந்த பிரச்சினை இங்கு மாத்திரம் அல்ல வெளிநாடுகளிலும் கானப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது நாம் வந்துள்ளோம் மக்களுக்கு சேவை செய்ய, இன்னும் ழூன்று மாதகாலப்பகுதியில் அதற்கு தீர்வுகள் முன்னெடுக்கப்படும்.
என குறிப்பிட்டார்


Post a Comment

0 Comments