இன்றிரவு நாட்டின் அதிக இடங்களில் மழையுடனான காலநிலை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
No comments: