தொடருந்து நிலைய அதிபர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்தொடருந்து நிலைய அதிபர்கள் மீண்டும் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.


தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்திருந்த 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு நிறைவடைந்தது.

இந்த நடவடிக்கை காரணமாக பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

 

Post a Comment

0 Comments