தொடரும் சுனாமி எச்சரிக்கை டோங்கானாவில் நடப்பது என்ன ?நேற்றைய தினம் டோங்கான தீவில் வெடித்த எரிமலை காரணமாக பசுபிக் கரையோர நாடுகளுக்கு (அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும்) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நேற்றையதினம் சுனாமி அலைகள் நியூசிலாந்து மற்றும் கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் போன்ற தொலைவில் உள்ள படகுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் பரவலான சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

ஜப்பான் ஹவாய், அலாஸ்கா மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கைகள் முன்னதாக வழங்கப்பட்டன. 

 நேற்றைய தினம் டோங்கான தீவில் வெடித்த எரிமலை  வெடிப்பு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு சமமானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. 

பூகம்பங்களை விட எரிமலைகளால் உருவாகும் சுனாமிகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அனைத்து தீவுக்கூட்டங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பசிபிக் சுனாமி மையத்தின் தரவுகள் 80 சென்டிமீட்டர் (2.7 அடி) அலைகள் கண்டறியப்பட்டதாகவும் டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 சுமார் 105,000 பேர் வசிக்கும் டோங்காவில், 

நியூசிலாந்தின் இராணுவம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தயார் நிலையில் இருப்பதாகவும், கேட்டால் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது 
ஹவாயில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நவிலிவிலி, கவாயில் அரை மீட்டர் (1.6 அடி) அளவிலும், ஹனாலியில் 80 சென்டிமீட்டர் (2.7 அடி) அளவிலும் அலைகள் பதிவாகியுள்ளன. 

 எரிமலை வெடிப்பினால் உருவாகிய சாம்பலின் காரணமாக தீவின் பரப்பளவு கிட்டத்தட்ட 45% விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
 

Post a Comment

0 Comments