மட்டக்களப்பில் காணாமல் போன சிறுவர்கள் சடலமாக மீட்பு


(கனகராசா சரவணன்) 

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிலிலுள்ள கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நண்பர்களுடன் நீராடச் சென்ற நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று சனிக்கிழமை (15 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பாடசாலை வீதியைச் சோந்த 16 வயதுடைய சத்தியாணந்தன் அக்சயன், மற்றும் கிரான் விஷ;ணு கோவில் வீதியைச் சோந்த 16 வயதுடைய ஜீவானந்தா சுஜானந்தன். ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடல் பகுpயில் சம்பவதினமான 14 ம் திகதி  பொங்கல் தினத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் நண்பர்கள் 15 பேருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர் இதன் போது ஆலையில் சிக்கி மூன்று பேர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். 

இதனை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் பொலிசார் கடற்படையின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அந்தபகுதி கடற்கரையில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதுடன் இரவு 7 மணியளவில் மற்றவரின் சடலமும் கரையொதுங்கியதையடுத்து இந்த இரு சடலங்களையும் பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வாழசை;சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் 

Post a Comment

0 Comments