உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை


இரசாயன உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கு போதியளவு உரம் கிடைக்காமை மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பு காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதேவேளை, 8,000 மெட்ரிக் டன் சீன உரத்தை ஏற்றிக்கொண்டு புதிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் தரத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்

கண்டியில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments: