மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு(ஜே.கே.யதுர்ஷன்)

ம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு இன்றைய தினம் பெரும் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இடம் பெற உள்ளது.

பூஜை நிறைவுற்றதும் ஆலய தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சொற்பொழிவு ஆற்றினார்.

மேலும் ஆலய நிர்மாண அலகரிப்பு மற்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கு நிதிபற்றாக்குறை நிலவிவருகிறது.

எனவே பொதுக்கள், நலன் விரும்பிகள் இயன்ற நிதியினை ஆலயத்திற்கு வழங்கி ஆலய கட்டட நிர்மாணத்திற்கும் ஆலய அலங்கரிப்புக்கும் உதவுமாறு நிருவாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.No comments: