கிளி நெச்சியில் பெண் சடலமாக மீட்பு காதலன் கைதுகடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.

பொலிசாரால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த நபரை (33) இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.


இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments