கைக்குண்டு யாரினால் தேவாலயத்தில் வைக்கப்பட்டது ? பிடிபட்ட சூத்திரதாரி


பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டானது  13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பிரதான சந்தேக நபர் எனத் தெரியவந்திருந்தது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments