முன்னாள் சிறைச்சாலை பொறுப்பதகாரிக்கு மரண தண்டனை


2012 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் பொறுப்பதிகாரி எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு விசேட மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டபோதே எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட நியோமல் ரங்கஜீவவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment

0 Comments