காணாமல் போன 15 வயது சிறுமியை தேடும் பணிகள் தொடர்கின்றன

wented


கடந்த 7 ஆம் திகதி மஹரகமவில் இருந்து காணாமல் போன 15 வயது 
சிறுமியைத் தேடும் பணியை மஹரகம பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமற்போன சிறுமியின் புகைப்படத்தை ஊடகங் களில் பொலிஸார் வெளியிட்ட போதிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அது தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

5 அடி 3 அங்குலம், மெலிந்த மற்றும் நீண்ட கூந்தல் என்பன அச்சிறுமியின் அடையாளங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8591645 மற்றும் 011- 2850222 அல்லது மஹரகம பொலிஸ் நிலையத்தின் 011- 2850700 என்ற இலக்கத்தின் ஊடாக மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்

மஹரகம பொலிஸ் 011- 2850700 

No comments: