8 புதிய கொவிட் தொற்றாளர்கள் கல்முனை காணிப்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு
கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 தொடர்பான அன்ரிஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இன்று (13) சுமார் 31 உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர்கள், தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணிப் பதிவகத்தில் 3ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments