உலக வாழ் இந்துக்கள் இன்று தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்

தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து இருப்பார்.

பண்டைய காலத்திலிருந்தே, தமிழர்கள் சூரியன் மகர ராசியில் நுழையும் மாதத்தை திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. 

 அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தை மாதம் பிறக்கட்டும் என்று குறிப்பிடுவதற்காகவே இந்த பழமொழி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

No comments: