மின் துண்டிப்பு தொடர்பில் மக்களுக்கான அறிவிப்பு


நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) பிற்பகல் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்திலும் இவ்வாறு மின் விநியோகம் தடைப்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments