மட்டக்களப்பில் குமார் பொன்னம்பலத்தின் 22 நினைவேந்தல்

(கனகராசா சரவணன்)

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் குமார் பொன்னம்பலம் 22 வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கட்சி காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (6) இடம்பெற்றது-

மட்டக்களப்பு அரசடி பிள்ளையர் வீதியில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட மாவட்ட காரியாலயத்தில் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தலில் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அன்னாரது திரு உருவபடத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி 2 நிமிட அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2000 ம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் காரில் சென்று கொண்டிருந்தபோது இனம் தெரியாவதர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments: