பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரனம் என்பது தேவையற்றது.



விஷேட நிவாரன நிதியினையே தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மத்திய மாகாண முன்னால் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரனம் என்பது தேவையற்ற ஒரு நிவாரனமாகும் தற்போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கம் பெருந்தோட்ட நிருவனங்களோடு பேச்சிவார்த்தை ஒன்றை மேற்கொண்டு விஷேட நிவாரன
நிதியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிசெயலாளரும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். 

05.01.2022. புதன்கிழழை ஹட்டனில் உள்ள தலமை காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன். இந்த அரசாங்கம் அரச உழியர்களுக்கு நிவாரனம் வழங்கப்போவதாக அறிவித்துள்ள போதிலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரனம் தொடர்பில் இதுவரை அறிவிக்கவில்லை. அரசஉழியர்களுக்கு இந்த மாதத்தில்
இருந்து மாதாந்த வேதனத்தை விட 5000ருபா வழங்கபட போவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தம் உழைத்து கொண்டே இருக்கிறார் இதேவேலை அந்நிய செலவானியையும் பெற்றுகொடுக்கிறார்கள். ஆயிரம் ருபா சம்பளம் என வர்த்தமானியில் அறிவித்துள்ள போதும் இதுவரை ஆயிரம் ருபாய் முலுமையாக கிடைக்கவில்லை தோட்ட தொழிலாளர்களுக்கு கோது மா நிவாரனம் வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது 80ருபா படி 15கிலோ கோதுமை மா வழங்கப்போவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. அதனை வழங்கும் பொருப்பை வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்புஇராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோதுமை மா என்பது சுகாதாரம் மற்றும் போசனை பிரிவின் கூற்றுபடி கோதுமை மா சத்தற்ற ஒரு உணவு பொருளாகும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் எந்த உணவினையும் உட்கொள்ளும் போது மனிதனுக்கு எந்த ஒரு சக்தியும் கிடைப்பதில்லை. அந்தவகையில் தோட்ட தொழிலாளர்கள் கோதுமை மாவிற்கு அடிமைபட்ட சமுகம் என்பதை இந்த அரசாங்கமும் மலையக தலமைகளும் ஒப்புவிக்க பார்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள். 

இந்த நிவாரன திட்டத்தை கூட மக்களை திருப்தி படுத்துவதற்காவே அறிமுகபடுத்திஇருக்கிறார்கள். விவசாயிகளை பொருத்தவரையில் இருபது பேச்சர்ஸ் குறைந்தவர்களுக்கு 5000ருபாவும் இருபது பேச்சர்ஸ்சுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கு 10,000ருபாவும் நிவாரனம் வழங்கபடுமென நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தில் கூட தோட்ட தொழிலாளர்கள் உள்வாங்கபட மாட்டார்கள் .

தற்போதய உள்ள கூட்டு ஒப்பந்தம் என்பது ஒரு சாத்தியபடாத விடயமாகும்.
மலையகத்தில் உள்ள தொழிற்சங்க கட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்ரசுக்கு எதிரான அமைப்பு எதிராக உள்ள தொழிற்சங்கங்களுக்கே அங்கத்துவ பலம் அதிகரித்துள்ளது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்கள் அடிமையாகவும் குறைந்த சம்பளத்தை பெருகின்றவர்கலாக இருக்கிறார்கள்

 எமது தலைவர் கூறுவது எல்லாம் தோட்ட தொழிலாளர்கள் நில உடமையாளர்கலாக இருக்கவேண்டும். 

தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக எந்த ஒரு நன்மையும் கிடைக்கபோவதில்லை. எமது கூட்டனியில் கடந்த அரசாங்கத்தின் போது எமது அமைச்சர்கள் ஒன்றினைந்து பிரதேசசபைகளை அதிகரித்து கொடுத்தார்கள். 

அதேபோல் பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கான வர்த்மானியையும் ஏற்படுத்தி கொடுத்தார்கள் அதனை முன்னெடுக்க சில இனவாத சக்திகள் தடையாக இருந்தார்கள். ஆனால் இன்று அமைச்சரவையில் மலையகத்துக்கென்று ஒரு அமைச்சர் இல்லை 

இராஜாங்க அமைச்சர் ஒருவர் மாத்திரமே உள்ளார். அவருடைய தகுதிக்கு ஏற்றவாறு பிரதேசசெயலகங்கலாக வரவேண்டியதை உபபிரதேசசெலகங்கலாக திற்ந்து வைக்கிறார்கள். என குறிப்பிட்டார்.

No comments: