வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பெரும் அவதி

எஸ்.சதீஸ்

வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பால் நோயாளர் பெரும் அவதி .
ஜந்து மாவட்டங்களிலுள்ள வைத்தியர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில்
ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் அதற்கமைய
நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு இன்று காலை வந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் பெருந்திரலான நோயாளர்கள் வருகை தந்திருந்த போதிலும்
நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததோடு
நோயாளர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டனர்.

அவசர சிகிச்சைபிரிவுகளின் நடவடிக்கை மாத்திரம் முன்னெடுக்கபடுமென
வைத்தியர்கள் தெரிவித்தனர் இந்த பணிபகிஷ்கரிப்பு இன்று காலைமுதல்
24மணித்தியாலம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேலை பொகவந்தலாவ, டிக்கோயா, மஸ்கெலியா கொட்டகலை லிந்துளை, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளின் வைத்திர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை
குறிப்பிடதக்கது.
No comments: