திருக்கோவில் பிரதேசத்தில் அதிகரித்து வரும் கால்நடை விபத்து.

யதுர்ஷன்திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கால்-நடைகள் இரவு நேரங்களில் நடமாடும் கால் நடைகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.
மேலும் இரவு நேரத்தல் கால் நடை புழக்கத்தினால் வீதியில் பயணம் செய்வோர்பலத்த அசோகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இன்று (19) அதிகாலை தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் கால்நடை ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான விபத்துக்கள் திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதனை கட்டுப்படுத்தவோ இதனை தடுக்க திருக்கோவில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவில் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: