கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சென்ற பண்-வண்டி பதியத்தலாவையில் விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம்

(கனகராசா சரவணன்)
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பஸ்வண்டியில் சுற்றுலா சென்ற பஸ்வண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 17 படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பஸ்வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சம்பவதினமான நேற்று சனிக்கிழமை இரவு கதிர்காமத்தை நோக்கி பிராயாணித்துக் கொண்டனர் 

இதன் போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு நித்திரை தூக்கத்தையடுத்து பஸ்வண்டி வீதியை விட்டு விலகி தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்னா என பொலிசார் தெரிவித்தனர்.;.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: