மட்டக்களப்பில் பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு தங்க ஆபரணங்கள் கொள்ளை

எஜமானி ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட வேலைக்காரி அவரது தந்தையார் உட்பட இருவர் கைது 

(கனகராசா சரவணன்) 

மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து சொப்பின் பையில் கொண்டு செல்ல  முற்பட்ட அங்கு வேலை செய்த வேலைக்காரி அவரின் தந்தை ஆகிய  இருவரை பொதமக்கள் மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது  இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பார்வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது பற்றி தெரியவருவதாவது 

குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவர்; வாழ்ந்துவருகின்ற நிலையில் சம்பவதினம் இன்று பகல் கடந்த காலத்தில் அங்கு வீட்டுவேலை பார்த்துவந்த பெண் ஒருவர்;  தந்தையாருடன்  சென்று தனது கஸ்டத்தை தெரிவித்துள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மதியபோசன உணவை சாப்பிட்டுவிட்டு நித்திரை கொள்வதற்கு மேல்மாடிக்கு சென்றுள்ளார்.

அதேவேளை மகளும் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளனர் அதேநேரம் உயிரிழந்தவர் குறித்த வேலைக்காரி மற்றும் அவரின் தந்தையாரை உணவு உண்டுவிட்டு போகமாறு அமர்த்தியுள்ளார். 

இந்த நிலையில் குறித்த பெண்ணை கத்தியால் கழுத்து மற்றும் கைகளை துண்டாகவெட்டியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து அவரின் கீத்தில் இருந்த தங்க ஆபரணங்களையும் காதில் உள்ள தோட்டை காதுடன் அறுத்தெடுத்து செப்பின் பையில் போடு;டு எடுத்துக் கொண்டு ஆட்ஆடா ஒன்றில் தப்பியேயாட முயற்சித்தபோது அங்கு விதியில் இரந்த பொதுடக்கள் அவர்களை மடக்கி பிடித்தனர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .இதில் கைது செய்யப்பட்ட பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

அதனையடுத்து பொலிஸ் தடயவியல் பிரிவு  வரவழைக்கப்பட்டு இது தொடர்பான  மேலதிக விசாணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது 
No comments: