கிழக்கில் நாளை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு


கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் நாளை (08) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார  சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்தார்.

கிழக்கில்  திருகோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களிற்கும்  மற்றும் அம்பாறை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலயத்திற்கும் நாளை (08) முதல் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஊடாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார  சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

Post a Comment

0 Comments