மட்டக்களப்பில் இன்று தடுப்பூசி ஏற்பும் பணிகள் முன்னெடுப்பு .


60000 (ஆறு இலட்சம்) மொத்த சனத்தொகையினை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு அதிகமான மூன்று இலட்சத்தி பதினொராயிரம் பேர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25000 இருபத்தி ஜயாயிரம் சைனோ பார்ம் தடுப்பூசி கிடைக்க இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் பணியானது இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவற்றை ஆபத்து நிலையில் உள்ளவர்களுக்கு வழங்க பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளுக்கு பிரித்து வழங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments