பெரியநீலாவணையில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு

செ.துஜியந்தன்


பெரியநீலாவணைக்கிராமத்தில் அரசினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.விமல்ராஜ் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன.

இக்கொடுப்பனவு வழங்கலின் போது கிராம உத்தியோகத்தர் ரி.திலீபன், பொருளாதார அபிவிருத்தி உத்தயோகத்தர் கே.ஜீவராணி, சமுகமட்ட குழுக்களின் தலைவிகளான ஆர்.ராதிகா, கே.தர்சாணிகா ஆகியோர் கலந்து கொண்டனர்
பெரியநீலாவணை முதலாம் கிராம சேவகர் பிரிவில் 263 குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் 13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா முதற்கட்டமாக பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments