கொவிட் 19 : கிழக்கின் தற்போதைய நிலவரம்


கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 190, கொரோன தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 05 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபீக் தெரிவித்தார்.

இதனடிப்படையில் குறித்த 05, மரணங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 01, நபரும் திருகோணமலை மாவட்டத்தில் 03, நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 01 நபரும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்

மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த 07, நாட்களில்1013,  கொரோனா  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 26 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபீக் தெரிவித்தார்.

அத்துடன் தொற்றின் நிலைப்பாடு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிராந்திய சுகாதார வலயங்களில் குறைவடைந்துள்ளதுடன் கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் தொற்றின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார வலயத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதி முடக்கப்பட்டுள்தாகவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபீக் குறிப்பிட்டார்.

வீதியோர வியாபாரங்கள், மற்றும் மக்கள் கூடும் படியாக வியாபாரம் செய்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் முப்படையினரின் ரோந்து நடவடிக்கையை பலப்படுத்துப் படியான முடிவுகள் நேற்றையதினம் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் ழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments