திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் நிவாரணப் பணிகள் முன்னெடுப்பு


திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்றைய தினம் (12) திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் பின்தங்கிய குடுபங்களுக்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட 90 குடுபங்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் நேற்றைய தினம் 2021/06/12  வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிவாரணமானது  கனடா நாட்டில் வாழும் இலங்கை தமிழர்  திரு.மனோகரன் சுப்பிரமணியம் அவர்களின் ஒருமில்லியன் ரூபாய் நிதி உதவியில்  அம்பாறை மாவட்டத்தில் வழங்கப்படுகின்றது அந்தவகையில் காரைதீவு பிரதேச தவிசாளர்  ஜெயசிறீல்  அவர்களின் மேற்பார்வையில்  நிவாரணப்பொதிகள் நேற்றையதினம் திருக்கோவில் பகுதியில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Post a Comment

0 Comments