கல்முனை பிராந்திய RDHS வைத்தியர்.ஜீ.சுகுணன் அவர்களால் திருக்கோவில் பிரதேசத்தில் நிவாரணப் பணி முன்னெடுப்பு

யதுர்ஷன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள,கொவிட்19 மூன்றாம் அலை காரணத்தினால் அன்றாட கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரம்  மேற்கொள்ளும் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வறியகுடும்பங்களுக்கான நிவாரண உதவி நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.மோகனகாந்தன் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக  கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ..சுகுணன் அவர்களினால் குறித்த நிவாரணம் ஏற்பாட செய்து மக்களுக்கு வழங்கப்பட்டது

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வறுமையில் காணப்படும் சுமார் 30 குடும்பங்களுக்கு  தலா 3000/- ருபாய் பெறுமதியான நிவாரணம் பொதிகளும் 1000/- ரூபாய் பணமும்   கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜு.சுகுணன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ப.மோகனகாந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments