நேற்றைய தினம் களுவாஞ்சிகுடியில் 948 பேருக்கு தடுப்பூசி

செ.துஜியந்தன்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பொதுமக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இத் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதனை அவதானிக்க முடிகின்றது.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையின் சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யேகேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் பிரதேச பெர்துச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் தடுப்பூசி ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுபாதாரப்பணிமனைக்கு 1600 கிடைக்கப்பெற்றள்ளன. இதற்கமைய சுகாதார பிரிவினரின் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன. இதுவரை 948 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.


இங்கு தொடர்ச்சியாக இப் பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றமையையிட்டு பொதுமக்கள் அரசாங்கத்தி;ற்கு நன்றி தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments