மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் ஒரு நிறைமாத கர்ப்பிணி உள்ளிட்ட 05 நபர்கள் மரணம்மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியலங்களில் 96 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  நேற்றையதினம் 05 மரணங்கள் சம்பவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களில்

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் 25

கோறளைப்பற்பற்று மத்தி காதார வைத்திய அதிகாரி பகுதியில் 15

ஏறாவூர், காத்தான்குடி காதார வைத்திய அதிகாரி பகுதியில்  தலா 11 பேரும்

வவுணதீவு காதார வைத்திய அதிகாரி பகுதியில் 10

ஆரையம்பதி காதார வைத்திய அதிகாரி பகுதியில் 05

வெல்லாவெளி காதார வைத்திய அதிகாரி பகுதியில்  04

செங்கலடி காதார வைத்திய அதிகாரி பகுதியில் 03

பட்டடிப்பளை  காதார வைத்திய அதிகாரி பகுதியில் 20 பேரும் உள்ளடங்கலாக நேற்றைய கடந்த 24 மணித்தியாலங்களில் 96 நாபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் மரணமடைந்த 05 நபர்களில்

கோறளைப்பற்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் இருவர் மரணமைடைந்துள்ளதுடன் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இதுவே மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட முதலாவது கர்ப்பவதி மரணமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏறாவூர் காதார வைத்திய அதிகாரி பகுதியில் 02 மரணங்கள்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் 01 மரணங்கள் என நேற்றைய நாளில் 05 மரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பின் 14 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலையங்களாக தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்.

 60000 (ஆறு இலட்சம்) மொத்த சனத்தொகையினை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு அதிகமான மூன்று இலட்சத்தி பதினொராயிரம் பேர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25000 (இருபத்தி ஜயாயிரம் சினோபார்ம்) தடுப்பூசி கிடைக்க இருப்பதாவும் இவற்றை ஆபத்து நிலையில் உள்ளவர்களுக்கு வழங்க பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளுக்கு பிரித்து வழங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments