கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை - அஜித் ரோஹண


மாநாடுகள்,உட்புற அல்லத வெளிப்புற நிகழ்ச்சிகள்,திருவிழாக்கள் மற்றம் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றவர்கள் மற்றம் அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விசேட சுற்றுநிருபம் சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இசை நிகழ்ச்சிகள்,களியாட்ட கொண்டாட்டங்கள் மற்றும் கரையோர கொண்டாட்டங்கள் என்பவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தகவல் அறிந்த உடன் புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்தி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கமாறு காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments: