மாலபேயில் இரு வீடுகளில் திடீரென உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி


கொரோனா தொற்று காரணமாக மாலபே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஒரு வீட்டில் ஒரு தம்பதியரும் மற்றைய வீட்டில் ஒரு பெண்ணுமே உயிரிழந்தவர்களாவர்.

குறித்த நபர்களின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளிலிருந்து, அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 84 முதல் 91 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த தம்பதியினரின் மகனும் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, உயிரிழந்த உறவினரான மற்றைய பெண்ணின் மகளும் கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments