நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு


நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதியான 1,914 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் இருந்து 542 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 113 பேர் தொம்பே பகுதியிலும் 101 பேர் கிரிந்திவெல பகுதியிலும் 80 பேர் பூகொட பகுதியில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 531 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 149 பேர் கெஸ்பேவ பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 116 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 85 பேருக்கும், காலி மாவட்டத்தில் 112 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 74 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

அதேபோல், யாழ்ப்பாண மாவட்டத்தில் 38 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 30 பேருக்கும், அநுராதபுரம் மாவட்டத்தில் 25 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிபபடுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments