மக்களை அவதானிக்க மீண்டும் ட்ரோன் கமெரா !


 தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை கண்டறிவதற்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பிரதேசங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இன்று முதல் ட்ரோன் தொழில்நுட்பம் ஊடாக  விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு, அதன் புறநகர் பகுதிகளிலுள்ள தொடர்மாடி குடியிருப்புத் தொகுதி உள்ளிட்ட  பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் அதிகளவில் தனிமைப்படுத்தல் விதிகள் மீறுகின்றமை அவதானிக்கப்பட்டதையடுத்து, இந்த ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments