24 மணி நேரத்திற்கும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய அதிகளவானோர் கைது
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை கடைப்பிடிக்கத் தவறிய 369 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட விதிகளை கடைப் பிடிக்காதவர்களை கண்டறியும் செயற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம்திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 12, 130 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments: