நிறுவனங்கள் மூடப்படுமாயின் சேவை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும் – நிமல் சிறிபால டி சில்வா


நாட்டில் தற்போது, நிலவும்  கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு  நிறுவனம் ஒன்றை மூடுவதற்கு நேரிடுமானால் சேவையை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று பரவல் காரணமாக பணிக்குத் திரும்ப முடியாமல் வீடுகளில் உள்ளவர் களுக்கு அவர்களது சம்பளத்தில் பாதியளவைச் செலுத் துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய அவ்வாறானவர்களுக்குச் சம்பளத்தில் பாதியளவு செலுத்தப்படுகின்றது.

பணிகளுக்குத் திரும்பியவர்களுக்கு முழுமையான வேதனம் வழங்கப்படுவதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறி ல டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: