ஐபிஎல் போட்டி பிற்போடப்பட்டது - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு இரண்டாயிரம் கோடி ரூபா நட்டம்..!


இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் பிற்போடப்பட்டமையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு இரண்டாயிரம் கோடி இந்திய ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 பரவல் காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் காலவறையின்றி பிற்போடப்பட்டது.

இந்தப் போட்டித் தொடருக்கான அனுசரனையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளின் தொகையில் 2000 கோடி ஏற்படலாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்  தகவல் வெளியிட்டுள்ளன.

52 நாட்களில் 60 போட்டிகளை நடத்துவதற்கு தீர்மதானிக்கப்பட்டிருந்தது.கொவிட் 19 காரணமாக போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டமையால் 29 போட்டிகள் மாத்திரமே நடத்தவதற்கு முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments