தமிழ் மொழி சேர்க்கப்பட்ட பெயர்பலகை மீள இணைக்கப்பட்டதாக தகவல் !
சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீனாவின் நிதியுதவியில் அண்மையில் அமைக்கப்பட்ட மின் வாசிகசாலை தொடர்பான விபரத்தை உள்ளடக்கிய பெயர்பலகையில் தமிழ் மொழி சேர்த்துக்கொள்ளப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தமிழ் மொழி அகற்றப்பட்டவாறு அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தற்போது தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்டங்களுக்கான பிரமதரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நீதி அமைச்சர் அலிசப்ரியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த பெயர் பலகையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு மீள திறக்கப்பட்டுள்ளததாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments: