பாராளுமன்றம் இன்று கூடுகின்றது...!


பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

இதற்கமைய காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரையான காலப்பகுதியில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை,மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான 4 அறிவித்தல்கள், சேர் பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம்,உண்ணடாட்டர (திருத்தச்) சட்டமூலம்,ஆகியவற்றை விவாதத்திற்கு எடுப்பதற்கு கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை முன்வைப்பதற்கும்,27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் கேள்விகளை முன்வைப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைவிட எதிர்கட்சியினர் முன்வைத்த யோசனைக்கு அமைய கொவிட்- 19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை காலை 11.00 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கம் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாளை (5)காலை 10.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை விவாதத்துக்கு எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தவார பாராளுமன்ற அமர்வுகளை மே 4ம்,5ம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments