நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்


நாட்டின் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுமுல்ல - வில்லோரா வத்தை கிராம சேவகர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் - பம்புவெல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பகுதியில் உள்ள எல்தெனியா - தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்குள்விட்டிய கிராம சேவகர் பிரிவு, இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவின் இன்கெஸ்ரே பகுதியும், ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள போடைஸ் தோட்டத்தின் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

No comments: