பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலைகெகிராவ - குடா கெகிகராவ பகுதியில் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

உயிரிழந்தவர் 41 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த நபர் தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் அலுவலக ஊழியராக பணி புரிபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இவருக்கும், மற்றொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதை அடுத்து இவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments