தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வொன்றில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்களுள் இரு பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்
நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களிடம் இருந்து மதுபானம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: