நுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

க.கிஷாந்தன்


நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (04) 46 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், ஹங்குராந்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும், நவதிஸ்பன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், அட்டன் பிரிவில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments