கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அதர்வா!


நடிகர் அதர்வா கொரோனாவிலிருந்து குணமடைந்து இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா கடந்த ஏப்ரல் 17ம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், முறையாக சிகிச்சை எடுத்து வருவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டிருப்பதாவது ‘நான் கொரொனாவிருந்து மீண்டிருக்கிறேன். என்னைப்போல அனைவருக்கும் கொரோனா தொற்று சாதாரண பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அன்பும், பிரார்த்தனையும் உடன் இருக்கும். தயவு செய்து உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments