அம்பாரை பொத்துவில் பகுதியில் தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு மீறிச் சென்றவர்களுக்கு கொவிட் 19 பரிசோதனை


கொவிட்19 தொடர்பில் நாடளாவிய ரீதியில் விசேட கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு மக்கள செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் கொட்டுக்கல் நாவலாறு , குடாக்கள்ளி ,  , மற்றும் ஏனைய இடங்களில் சுற்றித்திரிவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மேற் குறித்த சுற்றுலா இடங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களுக்கு இன்று ரெப்பிட் அன்ரிஜன் பரிதோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி காரியலாய உத்தியோகபூர்வ முகநுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது 

Post a Comment

0 Comments