சிகப்பு வலையமாகும் மட்டக்களப்பு ஒரே நாளில் 59 தொற்றாளர்கள் அடையாளம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்ரிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோனைகளில் இதுவரையில் 59 கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மேலும் சிறைக்கைதிகள் 67 பேருக்கு மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் 44 கைதிகளுக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிகப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டார். 

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில்

சிறை கைதிகள் 44

காத்தான் குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்    -4

மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3

வாகரை ,ஏறாவூர் தலா இருவராக 4

அரையம்பதி, பட்டிப்பளை, ஓட்டமாவடி, கே.பி.சி, தல ஒருவர்களாக  4

59 பேர் அடையாளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1629 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 21 மரணங்கள் சம்பவித்துள்ளது

மூன்றாம் அலையில்  646 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன்

12 மரணங்கள் சம்பவித்துள்ளதாகமட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும்  தெரிவித்தார்


No comments: