அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் எழுமாறாக கொவிட் 19 பரிசோதனை முடிவு ?நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றில் மூன்றாம் அலை பரவிய நிலையில் நாடு முழுவதும் மக்களது நடமாட்டத்தினை குறைக்கவும், தொற்றின் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் பல விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

பிரதேச மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் ஊடான அரசாங்கம் பல வழிமுறைகளை கையாளுகின்து சுகாதார அதிகாரிகளும் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்றின் வலுவினை குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார வலையத்திற்குட்பட்ட திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வீதி யோர வியாபாரிகள் 7, பேருக்கு இன்று 18 எழுமாறான ரெப்பிட் அன்ரிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டிருந்ததாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரநிருபசிங்கம் மோகனகாந்தன்  தெரிவித்தார்.

தொடர்ந்தும கருத்து தெரிவித்த  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி .
குறித்த 07 வியாபாரிகளுக்ம் தொற்று இல்லை என்பது கண்டறிப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 மூன்றாம் அலையில் 04 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் நலன் கருதி கட்டுப்பாடுகள் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடடார். 


Post a Comment

0 Comments