அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு


திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் நேற்று மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குச்சவெளி மதுரங்குடா பகுதியில் ஆணொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உயிரிழந்த நபர் யார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: