ஸ்பூட்னிக் கொவிட் - 19 தடுப்பூசிகள் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு


ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் கொவிட் - 19 தடுப்பூசிகளின் பங்கு இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு வரும் என்று ஔடத உற்பத்திகள்,வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்தொகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முதற்கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகவும் நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்து வளங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments