நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா


நாட்டில் ஒரே நாளில் அதிகப்படியான கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, சற்றுமுன்னர் நாட்டில் மேலும் 463 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் ஒரு இலட்சத்து நான்காயிரத்து 938 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments