அம்பாறை மாவட்டம் கல்முனை காணிப் பதிவாளர் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.


தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகள்  மக்களால் வெகுவாக பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் அம்பாறை மாவட்டம் கல்முனை காணிப் பதிவாளர் அலுவலகமானது, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


No comments: